2011-02-01 16:03:36

ஆப்ரிக்காவில் அறநெறி சார்ந்த சிந்தனை குறைபடுவது, எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டிற்குத் தடை, பேராயர் Tlhagale


பிப்.01,2011. ஆப்ரிக்கக் கண்டத்தில் எய்ட்ஸ் நோய் முக்கியமானப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய அதேவேளை, ஆப்ரிக்காவில் அறநெறி சார்ந்த சிந்தனை வறிய நிலையில் உள்ளது என்று குறை கூறினார் தென் மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Buti Tlhagale .

ஆப்ரிக்காவில் அதிகரித்து வரும் எய்ட்ஸ் நோய்ப் பிரச்சனைக்கு அமெரிக்க-ஐரோப்பியச் சிந்தனை வழியில் தீர்வு காண்பது அவசியம் என்று ஜொஹான்னஸ் பேராயரான Tlhagale பரிந்துரைத்தார்.

ஐரோப்பா, எய்ட்ஸ் மற்றும் HIV நோய்க் கிருமிகள் சார்ந்த அறநெறி விவகாரங்கள் குறித்துச் சிந்திக்கும் போது ஒரே பாலினச் சேர்க்கை மக்களை நினைக்கின்றது, ஆனால் ஆப்ரிக்கா இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ள இலடசக்கணக்கான ஆண், பெண் மற்றும் இளையோரை நினைக்கின்றது என்று கூறினார் பேராயர் Tlhagale.

Pretoria வில் நடைபெற்று வரும் ஆயர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் அவர்.

ஐ.நா. எய்டஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி 2009ல் தென்னாப்ரிக்காவில் சுமார் 29 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். உலகிலுள்ள இந்நோயாளிகளுள் 67 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.