2011-01-31 15:43:20

பிலிப்பைன்ஸ் இயற்கைப் பேரிடர்களுக்குச் சூற்றுச்சூழல் அழிவே காரணம், திருச்சபை அதிகாரிகள்


சன.31,2011. பிலிப்பைன்சில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களுக்குச் சூற்றுச்சூழல் அழிவே காரணம் என்று அந்நாட்டுத் திருச்சபை அதிகாரிகள் குறை கூறினர்

சூற்றுச்சூழல் அழிவு குறித்து அறிக்கை வெளியிட்ட மனிலா பேராயர் கர்தினால் Gaudencio Rosales, எந்தவித உணர்வுகளும் இன்றி மரங்களைக் கணக்கில்லாமல் வெட்டுவதால் இறுதியில் பாதிக்கப்படுவது நாமே என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் பிலிப்பைன்சில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 18 பெரு நகரங்களிலும் 190 நகரங்களிலும் சுமார் இருபது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய இடர்துடைப்பு அவை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் இதுவரை 4 கோடியே 50 இலட்சம் டாலர் என்றும் அரசு கணித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.