2011-01-31 15:44:29

பிரித்தானியாவில் ஏழைகள் மற்றும் வீடற்றோருக்கான செயல்பாடுகள் வாரம்


சன.31,2011 பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கு பிரித்தானியாவில் உள்ள கத்தோலிக்க அமைப்பு ஒன்று முயன்று வருகிறது.

ஏழைகள் மற்றும் வீடற்றோருக்கான செயல்பாடுகள் வாரம் என்று இத்திங்களன்று ஆரம்பமாகியுள்ள இந்த வாரத்தில், பிரித்தானியாவில் காணப்படும் ஏழை-பணம் படைத்தவர் பாகுபாட்டினை மக்கள் உணர்வதற்காக Church Action on Poverty (CAP) என்ற அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

உலகின் அதிகப் பணம் படைத்த முதல் ஐந்து நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் வாழும் மக்களில் ஐந்தில் ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக இவ்வமைப்பு கூறியுள்ளது.

வரும் மாதங்களில் அரசு மேற்கொள்ளவிருக்கும் பல நிதி ஒதுக்கீடு நடவடிக்கைகளால் இந்த நிலை இன்னும் மோசமாக மாறும் அபாயம் உள்ளதென்றும் இவ்வமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

ஏழை-பணம்படைத்தவர் இடையே உள்ள இடைவெளி, கடந்த 40 ஆண்டுகள் பிரித்தானியாவில் காணப்படாத அளவு உயர்ந்துள்ளதென்றும், இதைக் களைய 10,000 பேராகிலும் உதவிகள் செய்ய முன் வர வேண்டுமென்றும் CAPன் ஒருங்கிணைப்பாளர் Niall Cooper கூறினார்.







All the contents on this site are copyrighted ©.