2011-01-31 15:45:33

பங்களாதேஷ் பழங்குடி மக்கள் தலைமைத்துவ பயிற்சி பெறுவதற்கு காரித்தாஸ் அமைப்பின் முயற்சிகள்


சன.31,2011 பங்களாதேஷில் உள்ள பழங்குடி மக்கள் தலைமைத்துவம், மனித உரிமைகள், ஆளுமை ஆகியவைகளில் பயிற்சி பெறுவதற்கு பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு பயிற்சிப் பாசறைகள் நடத்தியது.

பங்களாதேஷ் Mymensinghல் உள்ள காரித்தாஸ் அலுவலகம் சனவரி இறுதி வாரத்தில் பழங்குடி மக்களுக்கென இந்தப் பயிற்சிகளை நடத்தியது.

பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களால் பலவித இன்னல்களுக்கு உள்ளாகும்போதும், வன்முறைகளுக்கு உள்ளாகும்போதும், சட்டம் நீதி வழியில் அவர்கள் எவ்வாறு தீர்வுகள் காண்பது என்பதை இம்மக்களுக்குச் சொல்லித் தருவதே இப்பயிற்சிகளின் நோக்கம் என்று அரசுசாரா அமைப்பின் ஊழியர் Proshanto Ruram கூறினார்.

இந்தப் பயிற்சிகளால் பழங்குடியினர் தங்கள் வாழ்வை இன்னும் உறுதியாக நிர்ணயிக்க முடியும் என்று இப்பயிற்சிகளை ஏற்பாடு செய்திருந்த Osman Goni கூறினார்.

பங்களாதேஷில் உள்ள 4,00,000 கத்தோலிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.