2011-01-31 15:41:48

இந்தியாவில் ஊழலை எதிர்த்து பல்சமயத்தவர் பேரணி


சன.31,2011. இந்தியாவில் பரவலாக மட்டுமீறி இடம் பெறும் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஞ்ஞாயிறன்று பல சமயங்களைச் சேர்ந்த சுமார் 2500 பேர் புதுடெல்லியில் பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி இறந்ததன் 63வது ஆண்டைக் குறிக்கும் விதமாக தலைநகர் டெல்லி உட்பட நாடெங்கும் 55 நகரங்களில் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன.

மனிதனைவிட பணம் அதிக விலைமதிப்பானதாக மாறும் போது ஊழல் தலைவிரித்தாடத் தொடங்குகின்றது என்று இப்பேரணியின் முடிவில் கூறினார் டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ.

சமத்துவம், நீதி, பாகுபாடின்மை ஆகியவற்றைப் போற்றும் இந்திய அரசியல் அமைப்பின்படி நடப்பதற்கு இந்தியர்கள் தவறியிருக்கிறார்கள் என்று கவலை தெரிவித்த பேராயர் கொன்செஸ்ஸாவோ, ஊழல், அநீதியானது, அநீதி, ஊழலை ஊக்குவிக்கின்றது என்றார்.

மேலும் சுவாமி அக்னிவேஷ் பேசிய போது, ஊழல் அதிகமான மக்களை வறுமைக்குள் தள்ளியிருப்பது ஒரு கொடுமை என்றார்







All the contents on this site are copyrighted ©.