2011-01-29 15:49:35

சிகிச்சை அளிப்பவர்கள் கொலையாளிகளாக மாறக் கூடாது, ப்ரெஞ்ச் ஆயர் எச்சரிக்கை


சன.29,2011. ஒரு நாட்டின் சட்டம் கொலை செய்வதை ஆதரிக்கும் போது அது மனிதருக்கு மற்றவர் மீது, குறிப்பாக நலிந்தவர் மற்றும் ஆதரவற்றவர் மீது மேலான அதிகாரத்தை வழங்குவதாக இருக்கின்றது என்று குறை கூறினார் ப்ரெஞ்ச் ஆயர் Bernard Ginoux
ப்ரெஞ்ச் செனட் அவை, அந்நாட்டில் காருண்யக் கொலையைச் சட்டமாக்கும் மசோதாவுக்கு எதிராக அண்மையில் ஓட்டளித்திருப்பது குறித்துக் கருத்து தெரிவித்த ஆயர் ஜினோ, நாம் மனிதர்களோடு ஊடாடுகிறோம், மனித வாழ்வை மதிக்க வேண்டும், யாரும் யாரையும் வேண்டுமென்றே கொல்வதற்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றார்.மருந்து நோய்களைக் குணப்படுத்துவதற்காக இருக்கின்றது, சிகிச்சை அளிப்பவர்கள் கொலையாளிகளாக மாறக் கூடாது என்றும் ஆயர் எச்சரித்தார்.







All the contents on this site are copyrighted ©.