2011-01-29 15:06:46

சனவரி 30, வாழந்தவர் வழியில்...


அமெரிக்க அரசுத் தலைவர்களில் ஒருவர் FDR என்று அழைக்கப்படும் Franklin Delano Roosevelt. இவர் 1882ம் ஆண்டு சனவரி 30ம் நாள் பிறந்தார். தனது 38வது வயதில் போலியோவை ஒத்த ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் உணர்விழந்து, சக்கர நாற்காலியில் வாழ்ந்தவர். இருந்தாலும், 1932ம் ஆண்டு தனது 50வது வயதில் அமெரிக்க அரசுத்தலைவர் போட்டியில் கலந்து வெற்றிபெற்றார்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்ட கடினமான காலத்தில் இவர் அரசுத்தலைவராகப் பொறுபேற்றார். 1933ம் ஆண்டு இவர் பொறுப்பேற்றபோது, அமெரிக்கா The Great Depression என்றழைக்கப்படும் பொருளாதாரச் சரிவில் துவண்டிருந்தது. இதைத் தொடர்ந்தது இரண்டாம் உலகப் போர். இக்கடினமான காலங்களில், அமெரிக்க நாட்டைத் திறமையுடன் இவர் வழிநடத்தினார். அமெரிக்க வரலாற்றில் இவர் ஒருவர் மட்டுமே நான்கு முறை அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரின் போது, பல முக்கிய முடிவுகளை இவர் எடுத்தார். அந்தப் போரின் முடிவுகள் தெரிவதற்கு சிறிது காலத்திற்கு முன், 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் முறையாக அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற மூன்றாம் மாதத்தில் இவர் காலமானார்.
மக்களாட்சி, மனிதசமுதாயத்தின் முழுமையான விடுதலை ஆகியவை இவரது கனவாக என்றும் இருந்தன. வாஷிங்டனில் உள்ள இவரது நினைவுச் சின்னத்தில் நான்கு விடுதலைகள் குறித்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன: FREEDOM OF SPEECH, FREEDOM OF WORSHIP, FREEDOM FROM WANT, FREEDOM FROM FEAR... பேசுவதற்கு விடுதலை, வழிபடுவதற்கு விடுதலை, தேவைகளிலிருந்து விடுதலை, அச்சத்திலிருந்து விடுதலை. இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய மகாத்மா காந்தி சனவரி 30ம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.