2011-01-28 15:56:06

கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகளுக்குத் தலத்திருச்சபை அரசை வலியுறுத்தல்


சன.28,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அருட்பணியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது குறித்த விரிவான விசாரணைகள் நடத்தப்படுமாறு அந்நாட்டுத் தலத்திருச்சபை அரசை விண்ணப்பித்துள்ளது.

பொகோட்டா நகரின் தென்பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இப்புதன் இரவில் இரண்டு கத்தோலிக்கக் குருக்களின் வாகனம் தனியாகக் கிடந்த நிலையில் அக்குருக்களின் உடல்களைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இக்கொலை குறித்துப் பேசிய கொலம்பிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் ஹூவான் கொர்தோபா விலோத்தா, ஒரே வாகனத்தில் சென்ற இவ்விரு குருக்களும் இனம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இவ்விரு குருக்களும் 37,38 வயதினர். கொலம்பியாவில் 1984ம் ஆண்டு முதல் இதுவரை 74 குருக்கள், 8 துறவியர், 3 குருத்துவ மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்








All the contents on this site are copyrighted ©.