2011-01-27 15:05:52

வியட்நாம் : ஆசியத் திருச்சபைத் தலைவர்களின் பத்தாவது கூட்டம்


சன.27, 2011. ஆசியத் திருச்சபைத் தலைவர்களின் பத்தாவது கூட்டம் வியட்நாமில் நடைபெறும் என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

Ho Chi Minh உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Jean Baptiste Pham Minh Man இப்புதனன்று UCAN செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் ஆசியத் திருச்சபைத் தலைவர்களின் நிறைவுக்கூட்டம் 2009ம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடைபெற்றது. 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த கூட்டம் வியட்நாமில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மார், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உட்பட 15 நாடுகளின் ஆயர் பேரவைகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய ஆயர் மன்றம் 1970ம் ஆண்டு நிறுவப்பட்டது.

கம்யூனிச ஆட்சிக்கு உட்பட்ட வியட்நாமில் ஆசியத் திருச்சபையின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய கர்தினால் Man, இந்தக் கூட்டத்தால் ஆசிய நாடுகளில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைப்பைத் தன் நாடு அறிந்துகொள்ள இது ஓர் அரிய வாய்ப்பு என்று கூறினார்







All the contents on this site are copyrighted ©.