2011-01-27 15:11:15

பிலிப்பின்ஸில் சமாதானப் பேச்சு வார்த்தை வெற்றிபெற இராணுவம் செபம்


சன.27, 2011. பிலிப்பின்ஸில் உள்ள புரட்சி இஸ்லாமியக் குழுவினருடன் வருகிற பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் சமாதானப் பேச்சு வார்த்தை முயற்சிகள் வெற்றிகரமாக அமைய அந்நாட்டின் இராணுவம் செபித்து வருகிறது.

MILF என்றழைக்கப்படும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அரசு மேற்கொள்ளவிருக்கும் இந்த சமாதான முயற்சி வெற்றி பெற்று, நாட்டில் அமைதியும் முன்னேற்றமும் பெருக வேண்டும் என்பதே தங்கள் நம்பிக்கை என்று இராணுவத் தளபதி Anthony Alcantara கூறினார்.

அரசின் இந்த முயற்சியுடன் சேர்ந்து, நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் அமைதியுடன் வாழ மக்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று தளபதி Alcantara வலியுறுத்தினார்.

அண்மைய மாதங்களில் பிலிப்பின்ஸில் நிலவி வரும் பதட்டச் சூழலில் இந்த சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகள் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன







All the contents on this site are copyrighted ©.