2011-01-27 15:08:49

பாகிஸ்தான் குண்டு வைப்பு தாக்குதல்களுக்கு ஆயர்கள் வன்மையான கண்டனம்


சன.27,2011. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் பல இறப்புக்களுக்குக் காரணமான குண்டு வைப்புத் தாக்குதல்களுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் நல்லிணக்க வாழ்வு குறித்த உடன்பாட்டு எண்ணங்கள் இல்லாத ஒரு சூழலில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கின்றது என்று பாகிஸ்தானின் ஹைதராபாத் ஆயர் மாக்ஸ் ரொட்ரிக்கெஸ் கூறினார்.

இறைவாக்கினர் இமாம் ஹூசைய்ன் இறந்ததன் 40 நாள் துக்கத்தை முடிக்கும் விதமாக, பாகிஸ்தானின் ஷியா முஸ்லீம் சமூகம் இப்புதனன்று நடத்திய ஊர்வலத்தின் போது இரண்டு இடங்களில் தற்கொலை குண்டு வைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 15 பேர் இறந்தனர் மற்றும் ஐம்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் தற்போதைய பாடத்திட்டம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் சமச்சீரானப் பாடத்திட்டம் தேவை என்று ஆயர் ரொட்ரிக்கெஸ் பரிந்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.