2011-01-26 15:31:19

கோவாவில் பழைய ஆயர் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளைத் தடுத்த கத்தோலிக்கர்கள்


சன.26, 2011. இந்தியாவில் கோவா நகரில் உள்ள பழைய ஆயர் இல்லத்தில் அரசாணை ஏதும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை அப்பகுதி கத்தோலிக்கர்கள் தடுத்துள்ளனர்.
இந்தியாவில் ASI என்று வழங்கப்படும் பழங்கால நினைவுச்சின்னங்களை மேற்பார்வையிடும் கழகம், அரசு உத்தரவு ஏதுமின்றி கோவாவில் பழைய ஆயர் இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் கட்டுமானப் பணிகளை இஞ்ஞாயிறன்று ஆரம்பித்தது.
இதைக் கண்ணுற்ற அருள்தந்தை Leonard Correia, காவல்துறைக்குப் புகார் தரவே, இந்தப் பணி நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் இப்பணி இத்திங்களன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி கத்தோலிக்க மக்கள், ஆயர் இல்ல வளாகத்தில் நுழைந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை வெளியேற்றினர்.
ஆயர் இல்ல வளாகத்தை ASI 25 ஆண்டுகளுக்குமுன் பெற்றதே சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறும் அருள்தந்தை Correia இப்போது அங்கு கட்டுமானப் பணிகள் செய்வது அத்துமீறியச் செயல் என்றும் எடுத்துரைத்தார்.கோவாவில் தலத்திருச்சபையுடன் எவ்வகையிலும் கலந்துரையாடல் செய்யாமல், புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பேராயலத்திற்கு அருகே மேம்பாலம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை ASI மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.