2011-01-25 15:15:34

முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: தமிழக அரசு உத்தரவு.


சன.25,2011. தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு, எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழிக் கேள்வி கேட்கும் முறையையோ கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடாது என்று புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு கூடாது எனக்கூறும் அரசு ஆணை, மாணவர் சேர்க்கையின் போது, பெற்றோர் கல்வித் தகுதியை கருத்தில் கொள்ளக் கூடாது, மற்றும், ஒவ்வொரு பள்ளியும் மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.