2011-01-25 15:06:58

மாஸ்கோ விமான நிலைய வன்முறைத் தாக்குதலுக்குத் திருத்தந்தை வன்மையான கண்டனம்


சன.25,2011. இரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்த அதேவேளை அதில் இறந்தவகர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இரஷ்ய அரசுத் தலைவர் Dmitry Medvedev வுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இதில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்த குடும்பங்களுடன் திருத்தந்தை ஆன்மீக ரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ்கோ Domodedovo விமானநிலையத்தில் இத்திங்கள் மாலை இடம் பெற்ற இந்தத் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலில் 35 பேர் இறந்தனர் மற்றும் 180 பேர் காயமடைந்தனர்.

2009ல் திருத்தந்தைக்கும் இரஷ்ய அரசுத் தலைவர் Medvedev வுக்கும் இடையே இடம் பெற்ற சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடத்துக்கும் இரஷ்யாவுக்கும் இடையே முழு அரசியல் உறவு ஏற்பட்டது.







All the contents on this site are copyrighted ©.