2011-01-25 15:14:27

தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது.


சன 25, 2011. தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் வேளையில், 2050ம் ஆண்டில் இந்தியவைச் சுற்றியுள்ள கடல்களின் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று ஐஎப்எம்ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதியில் உள்ள 13 மாவட்டங்களும் கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 10 மீட்டர் வரைத் தாழ்வாக உள்ளதால், கடல் மட்டம் உயரும்போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று இப்போதே எச்சரித்துள்ளது அந்நிறுவனம்.

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள கடல் மட்டத்தைவிட 100 மீட்டர் தாழ்வாகவே கடல்மட்டம் இருந்துள்ளது என்றும், கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில்தான் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் டைட்டஸ் என்ற விஞ்ஞானி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார். 2100ம் ஆண்டில் 10 செ.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும் என்று ஹாப்மேன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.