2011-01-25 15:11:21

செபமும் வழிபாடும் நிறைந்த வாழ்வே கல்வி சமூகத்தின் மையம்


சன.25, 2011. செபமும் வழிபாடும் நிறைந்த வாழ்வே கல்விச் சமூகத்தின் மையப்பகுதியாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்தின் Achonry ஆயர் Brendan Kelly.

அயர்லாந்தின் கத்தோலிக்கக் கல்வி நிலையங்களின் வாரத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய அந்நாட்டு ஆயர் பேரவையின் கல்வி அவையின் தலைவர் ஆயர் Kelly, இன்றைய உலகில் நுகர்வுக் கலாச்சாரம் இயற்கையை வெகு அளவில் பாதித்து வரும் சூழலில், இளையோர் அனைத்தையும் கற்பதற்கும் இயற்கையின் அழகை ரசிப்பதற்கும் உதவவேண்டியது கத்தோலிக்கக் கல்வி நிலையங்களின் கடமை என்றார்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே இறைவனை வழிபடுவதற்கும், அவருக்கு நன்றி கூறுவதற்கும், இயற்கையை வியந்து பாதுகாப்பதற்கும் என்பதை உணர்ந்து செயல்படும் மக்களாலேயே உலகின் வருங்காலத்தை உறுதிச் செய்யமுடியும் எனவும் கூறினார் ஆயர்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இவ்வுலகம் முழுமையும் புனிதமுமானதே என்பதையும் கோடிட்டுக் காட்டினார் ஆயர் கெல்லி







All the contents on this site are copyrighted ©.