2011-01-24 15:17:23

சனவரி 25 வாழ்ந்தவர் வழியில் .....






இவை போன்ற பல கூற்றுகளுக்கு உரிமையாளர் பிலிப்பைன்சின் 11வது அரசுத்தலைவர் மரிய கொராசோன் அக்குய்னோ. 1933ம் ஆண்டு சனவரி 25ம் தேதி பிறந்த அக்குய்னோ, ஆசியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசுத் தலைவராவார். பிலிப்பைன்சில் 1986ம் ஆண்டு சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்க்கோசை “மக்கள் சக்தி புரட்சி”யின் மூலம் வீழ்த்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர். “Tita Cory” அதாவது Cory Auntie என்று நாட்டு மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்டவர். டைம்ஸ் இதழ், இவரை, 1986ம் ஆண்டில், “ஆண்டின் பெண்” என்று சொல்லி பெருமைப்படுத்தியது. இவரது கணவர் பெனிஞ்ஞோ அக்குய்னோ (Benigno Aquino) புகழ்பெற்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மூன்றாண்டுகள் இருந்த பின்னர் பிலிப்பைன்சுக்கு 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திரும்பிய போது கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மரிய கொரசோன் அக்குய்னோவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. 1986, பிப்ரவர் 25 முதல் 1992, ஜூன் 30 வரை அரசுத் தலைவராகப் பணியாற்றினார். ஐந்து குழந்தைகளுக்குத் தாயான கொராசோன் அக்குய்னோ, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாந்தேதி தனது 76வது வயதில் இறந்தார். இவரை உடனடியாகப் புனிதராக அறிவிக்க வேண்டுமென்று இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட கத்தோலிக்கர் கேட்டனர். அந்த அளவுக்கு இவரது ஆன்மீக வாழ்வு சிறந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.