2011-01-22 15:54:29

வாழ்வுக்கு ஆதரவான நடைப்பயணத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து


சன.22,2011. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும், தாயின் வயிற்றில் கருவான நேரமுதல் அது இயற்கையான மரணம் அடையும் வரை அன்பு செய்யப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.

பிரான்சில் மனித வாழ்வுக்கு ஆதரவாக இஞ்ஞாயிறன்று இடம்பெறவுள்ள ஏழாவது நடைப்பயணத்தில் கலந்து கொள்வோருக்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, வாழ்வுக்காக உரிமைக்குக் குரல் கொடுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

அன்பு மற்றும் உண்மையின் கனியான வாழ்வின் புதிய கலாச்சாரம் காக்கப்பட ஆர்வம் கொண்டுள்ள இவர்களுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

பிரான்சில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த நடைப்பயணத்தில் சுமார் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட இளையோர்.

இதற்குத் தயாரிப்பாக இச்சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் செப வழிபாடு நடைபெறுகின்றது







All the contents on this site are copyrighted ©.