2011-01-22 15:55:54

லூத்தரன் சபை திருவழிபாட்டில் வத்திக்கான் அதிகாரி பங்கேற்பு


சன.22,2011.இஞ்ஞாயிறன்று உரோம் புனித பவுல் பசிலிக்காவில் உலக லூத்தரன் சபை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நடத்தும் திருவழிபாட்டில் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவரும் கலந்து கொள்கிறார்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch பங்கெடுக்கும் இவ்வழிபாட்டில் ஜெர்மனியின் இவாஞ்சலிக்கல்-லூத்தரன் சபை கூட்டமைப்பின் ஆயர் Johannes Friedrich தலைமையிலான பிரதிநிதிகள் குழு கலந்து கொள்ளும்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கும் லூத்தரன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒன்றிப்பின் அடையாளமாக இக்குழு ஓர் ஆலிவ் மரத்தை நட்டு ஆசீர்வதிக்கவிருக்கின்றது.

ஜெர்மனியின் விட்டன்பெர்க்கில் “லூத்தர் தோட்டத்தில்” மரம் நடும் இத்திட்டம் 2008ல் தொடங்கப்பட்டது. இங்கு 500 மரங்கள் நடும் திட்டத்தில் பங்கு கொள்வதற்கு உலகின் பல கிறிஸ்தவ சபைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லூத்தரன் சபையைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் உரோமைக்கு வந்ததன் 500ம் ஆண்டின் நிறைவாக இந்த லூத்தரன் சபை பிரதிநிதிகள் குழு வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.