2011-01-21 16:00:00

பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு


சன.21,2011: பிலிப்பைன்சில் மரண தண்டனை சட்டம் மீண்டும் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டு வருவது குறித்தத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்

குற்றங்களைத் தடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கு முறைகளை நிலைநாட்டவும் வேறுவிதமான வழிகள் இருக்கின்றன என்று கூறும் அந்நாட்டுத் திருச்சபையின் சிறைப்பணி ஆணையச் செயலர் ரொடோல்ப்போ தியாமான்த்தே, நாட்டில் இடம் பெறும் அதிகப்படியான ஊழலும் தவறுகள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதுமே மரண தண்டனை சட்டம் பற்றிய விவாதத்துக்குக் காரணம் என்றார்.

பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி மார்க்கோஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1987ல் இரத்து செய்யப்பட்ட மரண தண்டனை சட்டம், அதற்குப் பின்னர் பல தடவைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டு இரத்து செய்யப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.