2011-01-21 15:47:41

திருத்தந்தை ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு ஆட்டுக் குட்டிகளை பெற்றுக் கொண்டார்


சன.21,2011: திருவழிபாடுகளின் போது பேராயர்கள் கழுத்தில் அணியும் பால்யம் என்ற கழுத்துப் பட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கம்பளிகள் எடுக்க உதவும் ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு ஆட்டுக் குட்டிகளை இவ்வெள்ளியன்று பெற்றுக் கொண்டார் திருத்தந்தை.

புனித ஆக்னஸ் விழாவான சனவரி 21ம் தேதி இந்த ஆட்டுக் குட்டிகளைத் திருத்தந்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

புனித ஆக்னஸ் ஆதிகாலக் கிறிஸ்தவத்தில் ஆட்டுக் குட்டியாக உருவகிக்கப்படுகிறார்.

புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவான ஜூன் 29ம் தேதி புதிய பேராயர்களுக்கு இந்தப் பால்யம் வழங்கப்படுகிறது. இந்தப் பால்யம், பேராயரின் அப்போஸ்தலத்துவ அதிகாரத்தையும் திருத்தந்தைக்கும் பேராயருக்கும் இடையுள்ள சிறப்புப் பிணைப்பையும்

வெளிப்படுத்துகின்றது.

உரோம் பானிஸ்பெர்னாவின் புனித லாரன்ஸ் அருட்சகோதரிகள் இல்லத்தில் வளர்க்கப்படும் இந்த ஆட்டுக் குட்டிகள், நொமென்த்தானாவிலுள்ள புனித ஆக்னஸ் பசிலிக்காவில் மந்திரிக்கப்பட்டுப் பின்னர் திருத்தந்தையிடம் கொடுக்கப்படுகிறது. புனித செசீலியா பசிலிக்கா அருகில் வாழும் அருட்சகோதரிகள் இந்த ஆட்டுக் குட்டிகளின் கம்பளி உரோமத்திலிருந்து பால்யம் தயாரிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது








All the contents on this site are copyrighted ©.