2011-01-21 15:59:03

தாய்லாந்து சமுதாயம் நோயாக இருக்கின்றது - திருச்சபை


சன.21,2011: தாய்லாந்தில் ஆண்டுக்கு 1,10,000 முதல் 1,30,000 சட்டத்துக்குப் புறம்பேயான கருக்கலைப்புகள் இடம் பெறுவதை முன்னிட்டு கவலை தெரிவித்தத் திருச்சபை அதிகாரிகள், அந்நாட்டிற்குச் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகின்றது என்று கூறினர்.

தாய்லாந்து சமுதாயம் நோயாக இருக்கின்றது என்றுரைத்தத் திருச்சபை, கடந்த ஆண்டு நவம்பரில் புத்தமத ஆலயத்துக்கு அருகே 2002 கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கின்றது என்று கூறியது.

கற்பழிப்பு அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதற்கு 1957ம் ஆண்டின் சட்டம் அனுமதி அளிக்கின்றது.

தாய்லாந்தில் ஆண்டுக்கு 10 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் கருத்தாங்குகிந்றனர். 2010ம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி 8 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. இதன்படி பார்த்தால் 2 இலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளன என்று தெரிகிறது.







All the contents on this site are copyrighted ©.