2011-01-20 15:00:18

போர்க்குற்றம் : விசாரணைக்கு ஆம்னஸ்டி கோரிக்கை


சன 20,2011. இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீதான போர்க்குற்றப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை கழகம், அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே 20பேர் கொண்ட குழுவுடன் அமெரிக்காவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவோரை சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டனை வழங்கும் கடமை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய பசிபிக் இயக்குனர் Sam Zarifi, இலங்கையின் பல போர்க்குற்றங்களின் காரணகர்த்தாக்களாக அரசுத்தலைவர் , அவரின் சகோதரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இருந்துள்ளதையும் எடுத்துரைத்துள்ளார். போர்க்குற்றங்களில் இலங்கை அரசின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டி இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதுவர் Patricia Butenis அனுப்பிய செய்தி விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் அதிகாரி Sam Zarifi.








All the contents on this site are copyrighted ©.