2011-01-20 14:57:25

கோவா உயர்மறைமாவட்டம் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது


சன.20,2011. மேற்கு இந்திய மாநிலமான கோவாவில் அனைத்து ஆலயங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அனைத்து ஆலயக் கமிட்டிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது கோவா உயர்மறைமாவட்டம்.

இந்தப் பாதுகாப்புக்காகப் 15 ஆலோசனைகள் அடங்கிய குறிப்புக்களையும் எல்லா ஆலயங்களுக்கும் அனுப்பியுள்ளது இவ்வுயர்மறைமாவட்டம்.

திருவுருவங்கள் திருடப்பட்டது மற்றும் அவமரியாதைச் செய்யப்பட்டதையடுத்து காவல்துறை திருச்சபை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதன் பேரில் கோவா உயர்மறைமாவட்டம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆலயங்கள், பதிவு செய்யப்பட்ட பாதுகாப்புக் கம்பெனியிலிருந்து குறைந்தது ஒரு காவல்காரரையாவது இரவு வேலைக்கு அமர்த்த வேண்டும், துறவு மடங்கள் இவ்வகைக் காவல்காரரை அமர்த்த முடியாதபோது உள்ளூர் தன்னார்வப் பணியாளர்களை இதற்கென அமர்த்த வேண்டும் என்றும் கோவா உயர்மறைமாவட்டம் கேட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.