2011-01-19 14:52:57

நகரங்களின் நிலை படுமோசம்: தீர்வு காண டில்லியில் ஆலோசனை


சன.18,2011 : இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நகரங்களை நவீனமாக்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் வருகிற வெள்ளியன்று டில்லியில் நடக்கவிருக்கிறது.

நகரமயமாக்குதலை முன்னிறுத்தி ஏற்கனவே ஓன்பது மாநில முதல்வர்களை கொண்ட துணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாதம் 21ம் தேதி நடக்கும் கூட்டத்தில் நகரமயமாக்கலை தீவிரப்படுத்தக் கட்டுமானப் பணிகள், நிதி, நகரங்கள் விரிவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக நகரங்களில் உள்ள மக்கட்தொகையின் அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 28 கோடியே 50 இலட்சம். இது இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 27.8 விழுக்காடாகும். இது 2026ம் ஆண்டு 55 கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.