2011-01-19 14:48:47

டுனிசியாவில் அமைதியும் உறுதியான தன்மையும் ஏற்படுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்


சன.18,2011 : வட ஆப்ரிக்க நாடான டுனிசியாவில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து கவலை தெரிவித்த அதேவேளை, அந்நாட்டில் அமைதியும் உறுதியான தன்மையும் ஏற்படுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.

அந்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல், அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படல் போன்றவற்றின் அடிப்படையில் கடந்த வாரத்தில் வன்முறை போராட்டங்கள் தொடங்கின. இதனையொட்டி அந்நாட்டு அரசுத்தலைவர் Zine El Abidine Ben Ali நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

நம்பகத்தகுந்த ஜனநாயகத் தேர்தல்களை நடத்துவதற்கு இடைக்கால அரசு உருவாக்கப்படவும் டுனிசியா மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நா. தயாராக இருப்பதாகவும் பான் கி மூன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.