2011-01-19 14:49:35

கத்தோலிக்கப் பள்ளிக்குச் சீன அரசு அதிகாரிகள் பாராட்டு


சன.18,2011: சீனாவில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறார்க்குச் சிறப்புக் கல்வி வழங்குவதற்குக் கத்தோலிக்க அருட்சகோதரிகள் எடுத்து வரும் முயறசிகளைப் பாராட்டியுள்ளனர் அந்நாட்டு அரசு அதிகாரிகள்.

சீனாவில் தொடங்கவிருக்கும் லூனார் புத்தாண்டை முன்னிட்டு சமூகத்தில் நலிந்தோருக்கு ஆதரவு அளிக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக Yingxi சிறப்பு கல்வி மையத்தைப் பார்வையிட்ட Fufeng அரசு அதிகாரிகள், அருட்சகோதரிகளின் பணிகளைப் பாராட்டினர்.

இயேசுவின் திருஇதய பிரான்சிஸ்கன் மறைபோதக அருட்சகோதரிகளால் நடத்தப்படும் இம்மையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 130 சிறார் கல்வி கற்று வருகின்றனர்.

2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இம்மையத்தில் மூன்றுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார் படிக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.