2011-01-19 14:51:56

கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்தை கை கழுவியவர்கள் 70 இலட்சம் பேர்


சன.18,2011: இந்தியாவில் வேளாண்மையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் 70 இலட்சம் பேர் விவசாயத் தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலுள்ள 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.