2011-01-18 14:37:02

ஐரோப்பாவில் பெண்களைவிட ஆண்கள் முதலில் இறப்பதற்கு புகைப்பிடித்தலே காரணம் - நலவாழ்வு நிறுவனம்


சன.18,2011. ஐரோப்பாவில் சராசரிப் பெண்களைவிட ஆண்களின் இறப்பு முதலில் இடம் பெறுவதற்கு புகைப்பிடித்தலே காரணம் என்று உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் இறப்புக்கு இடையே அதிக இடைவெளி ஏற்படுவதற்கு புகைத்தல் தொடர்புடைய நோய்களே காரணம் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.

முப்பது ஐரோப்பிய நாடுகளில் எடுத்த ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளதாகக் கூறும் அந்நிறுவனம், பொதுவாக ஆண்களைவிட பெண்கள் நான்கு ஆண்டுகள் அதிகம் வாழ்கின்றனர் என்றும் ஆண்களின் இறப்பில் 60 விழுக்காடு புகைத்தல் தொடர்புடைய நோய்கள் என்றும் கூறியது.








All the contents on this site are copyrighted ©.