2011-01-15 13:16:38

இத்தாலிய ஆயர் : குடியேற்றதாரரைச் சகோதரராகப் பாவித்து வரவேற்க வலியுறுத்தல்


சன.15,2011. ஒருவர் மற்றவரைக் கடவுளின் மகனாகவும் தனது சகோதரனாகவும் ஏற்று அவனை வரவேற்பதிலும், மதிப்புடன்கூடிய உரையாடல் வழியாகவும் எந்தவிதமான வேற்றுமைகளையும் களைய முடியும் என்று இத்தாலிய ஆயர் ஒருவர் கூறினார்.

இஞ்ஞாயிறன்று திருச்சபை, 97வது உலகக் குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்தைக் கடைபிடிப்பதை முன்னிட்டு “ஒரே மனிதக் குடும்பம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட இத்தாலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழுத் தலைவரான ஆயர் புருனோ ஸ்கேத்தினோ (Bruno Schettino) இவ்வாறு கூறினார்.

இத்தாலியில் வெளிநாட்டவருக்கு சுமார் ஆறு இலட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் ஸ்கேத்தினோ, குடியுரிமைச் சட்டம் சீர்செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருத்தந்தை 10ம் பத்திநாதர் உரோமன் தலைமையகத்தில் செய்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 1912ம் ஆண்டில் குடியேற்றதாரர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கென முதல் அலுவலகம் வத்திக்கானில் திறக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.