2011-01-14 15:36:23

ஐ.நா.வின் இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு “G 77” முக்கிய பங்காற்ற அழைப்பு


சன.14,2011. “G 77” என்றழைக்கப்படும் வளரும் நாடுகளின் குழுவும் சீனாவும் ஐ.நா.வின் இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு முக்கிய பங்காற்றுமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

“G 77” அமைப்பின் தலைமைத்துவத்தை ஏமன் நாட்டிடமிருந்து அர்ஜென்டினாவுக்கு மாற்றிய நிகழ்வில் பேசிய மூன், மாறி வரும் காலங்களுக்கு மாற்றம் காணும் நிறுவனங்கள் தேவைப்படுகின்றன என்றார்.

77 நாடுகளைக் கொண்டு 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்ட “G 77” அமைப்பில் தற்சமயம் சீனா உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.