2011-01-13 15:07:39

மதச்சுதந்திரம் குறித்து திருத்தந்தை அண்மையில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு ஆசியா முழுவதுமே செவிமடுக்க வேண்டும் - இந்திய அறிஞர்


சன.13,2011. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசு, மற்றும் பொதுவாக ஆசியா முழுவதுமே மதச்சுதந்திரம் குறித்து திருத்தந்தை அண்மையில் கூறியுள்ள வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று இந்திய அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள IITயில் உயிரியல் மருத்துவப் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மை வளர பல நூல்களை எழுதியுள்ளவருமான முனைவர் Ram Puniyani இவ்விதம் கூறியுள்ளார்.
திருத்தந்தை அண்மையில் பன்னாட்டுத் தூதர்களுக்கு அளித்த உரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நாம் வாழும் இன்றைய உலகில் வெகு கவனத்துடன் கேட்க வேண்டும் என்று கூறிய பேராசிரியர் Puniyani, இந்தியாவில் வளர்ந்து வரும் இந்து அடிப்படை வாதத்திற்கு ஒரு மாற்றுச் சவாலாக திருத்தந்தையின் உரை இருந்ததென்று குறிப்பிட்டார்.Sangh Parivarன் பிரிவினைவாதம், மறு கன்னமும் மதசார்புள்ள அரசியலும் (The Other Cheek and Communal Politics) என்ற புத்தகங்களை எழுதியுள்ள முனைவர் Puniyani, Sangh Parivarன் இணையதளத்தில் காணப்படும் 'இந்து நாட்டின் எதிரிகள்' (Enemies of the Hindu Nation) என்ற பட்டியலில் இவரும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.