2011-01-13 15:08:48

தெற்குச் சூடானைத் தனி நாடாக பிரிப்பதைச் சட்டமயமாக்கத் தேவையான அளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன


சன.13,2011. தெற்கு சூடானைத் தனி நாடாக பிரிப்பதற்கு கடந்த ஞாயிறு முதல் இவ்வாரம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் இதுவரை 65 விழுக்காட்டு மக்களுக்கு மேல் பங்கெடுத்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட சூடானை வடக்கு, தெற்கு எனப் பிரிப்பது ஒரு முக்கியத் தீர்மானம் என்பதால், இத்தீர்மானத்தைத் சட்டமயமாக்கத் தேவையான அளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.
உள்நாட்டுப் போரினால் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டு வந்த சூடானில் 2005ம் ஆண்டு ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் பேரில் இவ்வாக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது. இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்ட மக்களின் மனநிலையைக் கொண்டு கணித்தால், இச்சனிக்கிழமை நிறைவு பெரும் இந்த வாக்கெடுப்பின் முடிவில் தெற்கு சூடான் தனி நாடாகும் வாய்ப்புக்கள் அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.