2011-01-13 15:09:01

திருத்தந்தை மேற்கொண்ட பிரித்தானியப் பயணத்தின் விளைவாக, அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் கத்தோலிக்கத் திருச்சபையுடன் நெருங்கி வந்துள்ளன


சன.13,2011. கடந்த செப்டம்பர் மாதம் திருத்தந்தை மேற்கொண்ட பிரித்தானியப் பயணத்தின் விளைவாக, அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் கத்தோலிக்கத் திருச்சபையுடன் நெருங்கி வந்துள்ளன என்று அண்மையில் வெளியான ஒரு கணிப்பு கூறுகிறது.
பர்மியர் மீடியா க்ரூப் என்று அழைக்கப்படும் ஓர் ஊடகத் துறை திருத்தந்தையின் பயணத்திற்குப் பின் அந்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ சபையினரைச் சார்ந்தவைடையே கருத்து கணிப்பொன்று நடத்தியது.
அக்கணிப்பின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இக்கணிப்பின்படி பல்வேறு சபைகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களில் 63 விழுக்காட்டினர் திருத்தந்தையின் திருப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதென்று கூறியுள்ளனர். இன்றைய சமுதாயம் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறித்து திருத்தந்தை சரியான கருத்துக்களைக் கூறினார் என்று 64 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.இவர்களில் பெரும்பான்மையானவர்கள் 35 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.