2011-01-13 15:07:11

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை காரித்தாஸ் அமைப்பின் உதவிகள்


சன.13,2011. இலங்கையில் பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை காரித்தாஸ் அமைப்பு பெருமளவில் உதவிகளைச் செய்து வருகின்றது.
பல்வேறு பங்குகளிலிருந்து உதவிகள் செய்ய முன் வந்த தொண்டர்களின் உதவியுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயதானவர்களுக்குத் தனிப்பட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. மேலும், வீடுகளை இழந்துள்ளோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. அணைகள் நிரம்புவதால், அங்குள்ள மடைகள் திறக்கப்பட்டு, வெள்ளத்தின் அளவு உயர்ந்த வண்ணம் உள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அரசின் உதவிகள் இன்னும் பல பகுதிகளை அடையவில்லை என்றும், மழையாலும், குளிராலும் பல வயதானோர் இறக்கும் ஆபத்தில் உள்ளனர் என்றும் Badulla மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்தந்தை Mashal M. Rajanayagam கூறினார்.WFP எனும் உலக உணவுத் திட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,00,000 மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதற்கு 5,00,000 டாலர் நிதி உதவி செய்துள்ளதென்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.