2011-01-12 16:00:56

ஹெயிட்டி நில நடுக்கத்தின் முதலாண்டு நினைவாக ஐ.நா.பொதுச்செயலர் செய்தி


சன.12, 2010. வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் இயற்கைப் பேரிடருக்கு வரலாறு காணாத அளவு அகில உலக நாடுகளிடமிருந்து உதவிகளும் கிடைத்தன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
சென்ற ஆண்டு சனவரி 12 ஹெயிட்டி நாட்டில் 2,20,000 பேரைக் கொன்ற நில நடுக்கத்தின் முதலாண்டை நினைவுகூர்ந்த ஐ.நா.பொதுச் செயலர், அகில உலகின் உதவிகள் இன்னும் பல மடங்காகத் தேவைப்படுகிறது என்று கூறினார்.
உலகின் மிக எழமையான நாடுகளில் ஒன்றான ஹெயிட்டியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் அந்நாட்டு அரசின் மிக முக்கியமான தகவல் கோப்புக்கள் பெருமளவில் அழிந்து போயின என்று UNICEF அமைப்பின் தலைமை இயக்குனர் Antony Lake பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பல நாடுகளிலிருந்து வாக்களிக்கப்பட்ட உதவித் தொகைகள் வந்து சேருவதற்கு கால தாமதம் ஏற்பட்டதால் மறு வாழ்வுப் பணிகளும் தாமதமாக்கப்பட்டன என்று Antony Lake மேலும் கூறினார்.நில நடுக்கம் ஏற்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் இடிபாடுகளும், தோற்று நோய்களும் இந்நாட்டில் காணக் கிடக்கின்றன; இருந்தாலும் இம்மக்களின் நம்பிக்கை ஊக்கம் அளிப்பதாய் இருக்கிறதென்று UNICEF இயக்குனர் Antony Lake எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.