2011-01-12 16:00:31

கத்தோலிக்கப் பள்ளிகளில் தரப்படும் கல்வி பிற பள்ளிகளில் தரப்படும் கல்வியை விட சிறந்ததாய் உள்ளது இங்கிலாந்தின் ஆய்வறிக்கை


சன.12, 2010. இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளில் தரப்படும் கல்வி பிற பள்ளிகளில் தரப்படும் கல்வியை விட சிறந்ததாய் உள்ளதென்று இத்திங்களன்று வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
பிரித்தானிய அரசு விதித்துள்ள கல்வித் தரத்தின் அளவுகோலைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கத்தோலிக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி சிறப்பாக உள்ளதென்றும், முக்கியமாக, மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் கத்தோலிக்கப் பள்ளிகள் அதிகம் அக்கறை காட்டுகின்றன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்கப் பள்ளிகளின் அயரா உழைப்பைக் காட்டும் வகையில் இந்த அறிக்கை வெளி வந்துள்ளதென்று ஆயர் Malcolm McMahon கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த ஆய்வின் படி, 2009 ம் ஆண்டு கத்தோலிக்கப் பள்ளிகளில் 60 விழுக்காடு பள்ளிகள் மிகச் சிறந்தவை என்று சொல்லப்பட்டன. 2010 ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதேன்று இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.