2011-01-12 15:59:00

இலங்கையில் தற்போது நிலவிவரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் - மன்னார் ஆயர்


சன.12, 2010. இலங்கையில் மதச்சார்பான கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தற்போது நிலவிவரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென்று இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.
மதத்தலைவர்களும் பிற சிறுபான்மை குழுக்களின் தலைவர்களும் அமைதியான முறையில் கூட்டங்களையும், பிற நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள தேவையான சுதந்திரம் அளிக்கப்படவேண்டுமென்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறினார்.
“பாடங்கள் பயிலவும் ஒப்புரவுக்கும்” என்று அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினரை ஆயர் ஜோசப் அண்மையில் சந்தித்தபோது, தன் கருத்துக்களைக் கூறினார்.
இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் அடக்கச் சடங்கில் கலந்து கொள்ளும் மக்களையும், அச்சடங்குகளை நடத்தும் குருக்களையும் இராணுவத்தினர் தடுத்துள்ளனர் என்று ஆயர் ஜோசப் எடுத்துரைத்தார்.
நிலைத்த அமைதியையும், ஒப்புரவையும் நாட்டில் உருவாக்க இலங்கையில் நிலவும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படை உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றும், தமிழ் மக்களின் மொழி, கல்வி, அரசில் அதிகாரப் பகிர்வு ஆகிய பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றும் ஆயர் ஜோசப் எடுத்துரைத்தார்.ஆயரின் பரிந்துரைகளை அரசின் ஆய்வுக்குழு கவனமாய் செவிமடுத்ததென்று அருள்தந்தை அந்தனி விக்டர் சூசை UCAN செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.