2011-01-11 15:23:42

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் விதிமீறல் என்கிறார் வெனிசுவேகலா கர்தினால்.


ஜன 11, 2011. வெனிசுவேலா நாட்டில் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க என்ற காரணம் காட்டி, அந்நாட்டு அரசு, நிலங்களைக் கைப்பற்றி வருவதில் அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் அந்நாட்டு கர்தினால் Jorge Urosa Savino.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களை அமைத்துத் தரும் அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியதே எனினும், தனியார் நிலங்களைக் கைப்பற்றுவதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்றார் கர்தினால்.

எந்த ஒரு நல்ல நோக்கமும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையக்கூடாது என மேலும் கூறினார் கர்தினால் Urosa Savino.








All the contents on this site are copyrighted ©.