2011-01-08 14:41:07

ஹெய்ட்டி மக்களுக்காகச் செபிக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அழைப்பு


சன.08,2011. ஹெய்ட்டியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு இந்த சனவரி 12ம் தேதியோடு ஓராண்டு நிறைவுறும் வேளை, அந்தப் பாதிப்பால் தொடர்ந்து துன்புறும் அந்நாட்டு மக்களுக்காகக் குவாதாலூப்பே அன்னைமரியிடம் செபிக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஹெய்ட்டி நாட்டுக்கானச் சிறப்பு ஆலோசகர் குழுவின் தலைவரான பேராயர் தாமஸ் வென்ஸ்க்கி, ஹெய்ட்டி மக்களுக்கானச் செபம் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஓராண்டு நிறைவு நாளான வருகிற புதனன்று குவாதாலூப்பே அன்னைமரித் திருத்தலத்தில் நவநாள் செபங்கள் ஆரம்பிக்கப்படும். இந்தச் செபங்கள், 22 மற்றும் 23 தேதிகளில் திருப்பலியோடு நிறைவடையும். அச்சமயத்தில் எடுக்கப்படும் உண்டியல் ஹெய்ட்டி மக்களுக்கு அனுப்பப்படும் என்றும் பேராயர் வென்ஸ்க்கி கூறினார்.

Knights of Columbus என்ற அமெரிக்கப் பக்த அமைப்பு, ஹெய்ட்டிக்கு 10 இலட்சத்துக்கு அதிகமான டாலர் நிவாரண உதவிகளைச் செய்துள்ளது

2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி 35 வினாடிகள் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 2,30,000 பேர் இறந்தனர். இதில் வீடுகளை இழந்த பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தற்காலிகக் குடியிருப்புகளில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்







All the contents on this site are copyrighted ©.