2011-01-08 14:44:08

துருக்கி : ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர், உதவிப் பிரதமர் சந்திப்பு


சன.08,2011.துருக்கியில் 58 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்நாட்டு உயர் அரசு அதிகாரி ஒருவர் இஸ்தான்புல் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் தலைமையகம் சென்று ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரைச் சந்தித்துள்ளார்.

1952ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் Menderes, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Athenagoras ஐச் சந்தித்தற்குப் பின்னர் இவ்வெள்ளியன்று அந்நாட்டு உதவிப் பிரதமர் Bulent Arinc ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew வைச் சந்தித்தார்.

தங்கக் கொம்பை ஆசீர்வதித்த பின்னர் மார்மராக் கடலை நோக்கிச் சிலுவை வரைந்த முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew, உதவிப் பிரதமருடன் தனது உரையாடலைத் தொடங்கினார்.

துருக்கியில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்த அவர், துருக்கி இவ்வாண்டில் ஐரோப்பிய சமுதாய அவையில் இணையும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.