2011-01-08 14:43:09

காப்டிக் ரீதிக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவை அமைதியாகக் கொண்டாடினர்


சன.08,2011.எகிப்தில் காப்டிக் ரீதிக் கிறிஸ்தவர்கள் இவ்வெள்ளியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவை வன்முறை அச்சுறுத்தலின்றி அமைதியான முறையில் கொண்டாடினாலும் இசுலாமிய தீவிரவாதமும் கிறிஸ்தவர்க்கெதிரானப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

எகிப்தில் காப்டிக் ரீதிக் கிறிஸ்தவ ஆலயங்களைச் சுற்றி குறைந்தது எழுபதாயிரம் காவல்துறையினரும் உப இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்க அக்கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் திருவழிபாடுகளில் பயமின்றிக் கலந்து கொண்டனர்.

எனினும், அனைத்து மக்களின் நல்லிணக்க வாழ்விற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாய் இருக்கும் இசுலாமிய அடிப்படைவாதம் களையப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு அரசு அதிகாரிகளுக்கு இணையதளங்களில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், பள்ளி அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கத்தோலிக்கத் திருச்சபையும் அரசுக்குப் பரிந்துரைகளை முன் வைத்துள்ளது








All the contents on this site are copyrighted ©.