2011-01-07 14:45:50

இந்திய உச்சநீதி மன்ற ஆணைக்குத் திருச்சபைத் தலைவர்கள். வரவேற்பு


சன.07,2011. இந்தியாவில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பழங்குடி இனப் பெண்ணை நிர்வாணமாக நடத்திச் சென்ற குற்றத்தோடு தொடர்புடைய நான்கு பேருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்ற உச்சநீதி மன்ற ஆணையை வரவேற்றுள்ளனர் இந்திய திருச்சபைத் தலைவர்கள்.

மஹாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் 1998ம் ஆண்டில் இந்தக் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைத் தீர்ப்புச் சொன்னதையடுத்து இது குறித்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் இக்குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படுமாறு மஹாராஷ்டிர அரசை இப்புதனன்று கேட்டுள்ளது.

இந்தியாவில் பழங்குடி இன மக்களுக்குச் செய்யப்படும் அநீதி நாட்டின் வரலாற்றில் வெட்கத்துக்குரிய அத்தியாயம் என்று உச்சநீதி மன்றம் கூறியது.

இந்திய மக்கள் தொகையில் சுமார் எட்டு விழுக்காடாக இருக்கும் பழங்குடி இன மக்கள் நாட்டில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட மற்றும் நலிந்த மக்களாக இருக்கிறார்கள் என்றும் உச்சநீதி மன்றம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.