2011-01-05 15:30:34

உரோமையில் வருகிற ஜூன் மாதம் திருநற்கருணை ஆராதனையை மையப்படுத்திய பன்னாட்டு கருத்தரங்கு


சன.05, 2011. வருகிற ஜூன் மாதம் 20ம் தேதி துவங்கி நான்கு நாட்களுக்கு உரோமையில் திருநற்கருணை ஆராதனையை மையப்படுத்திய பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்புனித திருநற்கருணையின் அருட்பணியாளர்கள் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படும் இக்கருத்தரங்கில் ஏழு கர்தினால்கள் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் பேச்சாளர்கள் கலந்து கொள்வர் என்று தெரிகிறது.
புதிய மறைபரப்புப் பணிக்கு அடிப்படை நற்கருணை ஆராதனையே என்று இவ்வமைப்பினை உருவாக்கிய ஆயர் Dominique Rey கூறினார். புதிய மறைபரப்புப் பணி என்பது திருத்தந்தையால் அடிக்கடி பேசப்படும் ஒரு கருத்து என்பதால், அதையொட்டி இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென ஆயர் Rey எடுத்துரைத்தார்.இக்கருத்தரங்கின் முடிவில் புனித ஜான் லாத்தரன் மற்றும் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயங்களில் திருத்தந்தை நடத்தும் கிறிஸ்துவின் திருஉடல் திருப்பவனியில் கருத்தரங்கில் பங்கு பெறும் அனைவரும் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.