2011-01-05 15:31:04

2010ம் ஆண்டில் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


சன.05, 2011. நிறைவு பெற்ற 2010ம் ஆண்டில் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று FIDES செய்தி நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு ஆயர், 15 குருக்கள், ஒரு ஆண் துறவி, ஒரு பெண் துறவி, இரு குருமாணவர்கள் மற்றும் மூன்று போது நிலையினர் என 23 பேர் கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
மறைபரப்புப் பணியாளர்களுக்கு எதிராக தென் அமெரிக்கா அதிகமான வன்முறையை காட்டியுள்ளதென்றும், அக்கண்டத்தில் பத்து குருக்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் துருக்கியில் கொல்லப்பட்ட ஆயர் Luigi Padovese உட்பட ஆசிய நாடுகளில் நான்கு குருக்கள் மற்றும் ஒரு அருள்சகோதரி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று FIDES செய்தி நிறுவனத்தின் இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.