2011-01-04 14:26:15

காப்டிக் ரீதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிப்பதற்குத் தயாராகி வருகின்றனர்


சன.04,2011.எகிப்தில் புத்தாண்டு தினத்தன்று காப்டிக் ரீதிக் கிறிஸ்தவர் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலையும் விடுத்து அக்கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிப்பதற்குத் தயாராகி வருகின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.

காப்டிக் ரீதி கிறிஸ்தவர்கள் சனவரி 7ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வேளை, அக்கிறிஸ்தவர்களின் தலைவரான முதுபெரும் தந்தை மூன்றாம் ஷெனூதா, நள்ளிரவுத் திருப்பலியைச் சிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளார் என்று அந்நிறுவனம் கூறியது.

எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு திருவழிபாட்டை முடித்து ஆலயத்தை விட்டு வெளியே வந்த போது கார் குண்டு விபத்துக்கு உள்ளாயினர். இதில் 21 பேர் இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, கானடா, ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளில் வாழும் காப்டிக் ரீதிக் கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடும் போது தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு அந்தந்த நாடுகளின் அரசைக் கேட்டு வருகின்றனர்








All the contents on this site are copyrighted ©.