வியட்நாம் திருச்சபை ஜுபிலி ஆண்டின் நிறைவு விழாவில் திருத்தந்தையின் சார்பில் கர்தினால்
ஐவன் டயஸ்
டிச.30, 2010. வியட்நாம் திருச்சபையில் தற்போது கொண்டாடப்படும் ஜுபிலி ஆண்டின் நிறைவு
விழாவில் தனக்குப் பதிலாக கர்தினால் ஐவன் டயஸைக் கலந்து கொள்ளும்படி திருத்தந்தை கேட்டுக்
கொண்டுள்ளார்.
வியட்நாமில் திருச்சபை வேரூன்றி 350 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த
நிறைவை ஒரு ஜுபிலி ஆண்டாக அந்நாட்டின் தலத்திருச்சபை கடந்த ஓராண்டளவாகக் கொண்டாடி வருகிறது.
ஜுபிலி ஆண்டின் நிறைவு விழா சனவரி மாதம் 4 முதல் 6 தேதிகள் வரை கொண்டாடப்படும்.
இந்த
நிறைவு விழாவுக்கு கர்தினால் ஐவன் டயஸைத் திருத்தந்தையின் சிறப்புத் தூதராக செல்லும்படி
திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதம் இப்புதன் மாலை வெளியிடப்பட்டது.
வியட்நாமில்
அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் உரசல்கள் அதிகமாகியுள்ளன. வியட்நாம் அரசும்
சீன அரசைப் போலவே அந்நாட்டில் உள்ள திருச்சபையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வேளையில், அங்கு கொண்டாடப்படும் ஜுபிலி நிகழ்ச்சிகள் தனி முக்கியத்துவம்
பெறுகின்றன.