2010-12-30 14:54:19

பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் அன்று கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதறகுப் பின்னும் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவுகள் பாதிக்கப்படவில்லை


டிச.30, 2010. பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் விழாவன்று கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பின்னும், கிறிஸ்தவ இஸ்லாமிய உறவுகள் அப்பகுதியில் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அனைத்து மதங்களாலும் கொண்டாடப்படுகிறது என்றும், கிறிஸ்து போதித்த அன்பு, அமைதி, சமுதாய பிணைப்பு ஆகியவை மனித சமுதாயத்தை உயர்த்தும் படிப்பினைகள் என்றும் Mindanao பகுதியில் உள்ள மதங்களுக்கிடையேயான ஒப்புரவு கழகம் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையானது கத்தோலிக்க, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்களால் கையோப்பமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் நாளன்று காவல் துறையினர் முகாமில் இருந்த இயேசுவின் திரு இருதயக் கோவில் தாக்கப்பட்டதில் ஒரு குரு உட்பட 11 பேர் காயமடைந்ததையொட்டி, அப்பகுதியில் இன்னும் பரவலாக பதட்ட நிலை உள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.