2010-12-30 14:53:20

பருத்தி விவசாயிகள் போராட்டத்தில் மகாராஷ்டிரா தலத் திருச்சபை


டிச.30, 2010. அரசின் சலுகைகள் கேட்டுப் போராடி வரும் பருத்தி விவசாயிகளுடன் மகாராஷ்டிரா தலத் திருச்சபை இணைந்துள்ளது.

மகாராஷ்டிரா அரசு அண்மையில் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களில் பருத்தி வேளாண்மையில் ஈடுபாட்டிருப்போரை சேர்க்காததால், அவர்கள் இப்புதனன்று Pandhar Kanwada என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தி சாகுபடி பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்ட பல விவசாயிகளின் மனைவியர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அண்மையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அப்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாக 4427 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உணமையான எண்ணிக்கை இதைவிட மூன்று மடங்கு அதிகம் என்று மகாராஷ்டிரத் தலத் திருச்சபையும் பிற சமூக ஆர்வலர் குழுக்களும் கூறி வருகின்றன.

அரசின் இந்த அறிக்கைக்குப் பின்னும் உணவு மற்றும் காய்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை தங்கள் திட்டங்களில் சேர்த்திருக்கும் அரசு, பருத்தி விவசாயிகளைப் புறந்தள்ளியது அநீதி என்று இக்குழுக்கள் கூறுகின்றன.

பருத்தி விவசாயிகளின் போராட்டம் மிகவும் நியாயமானது என்பதால் இப்போராட்டத்தில் திருச்சபையும் இணைந்துள்ளதென்று நாக்பூர் உயர் மறைமாவட்டத்தின் சமூகப் பணிக் குழுவின் இயக்குனர் அருள்சகோதரி Daya Mathew கூறினார்.








All the contents on this site are copyrighted ©.