2010-12-30 14:55:22

பங்களாதேஷில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் புதுப்பிக்கும் பயிற்சிப் பாசறை


டிச.30, 2010. பங்களாதேஷின் தென் கிழக்குப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் புதுப்பிக்கும் நோக்குடன் பயிற்சிப் பாசறை ஒன்றை நடத்தினர்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக Srimangal எனும் இடத்தில் உள்ள புனித யோசேப்பு ஆலயத்தில் இத்திங்கள் முதல் புதன் வரை இப்பயிற்சிப் பாசறை நடத்தப்பட்டது.

Oraon, Kharia, Munda ஆகிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பாசறையில் கலந்து கொண்டனர்.

பழங்குடியினரின் பல சடங்குகள், வாழ்வு முறைகள் பல ஆண்டுகளாகக் கவனிப்பாரற்று இருப்பதால், இவைகள் புதிய தலைமுறையினருக்குத் தெரியாமலேயேப் போகும் ஆபத்து உண்டு என்று இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்த காரித்தாஸ் பணியாளர் Pius Nanuar கூறினார்.

பழங்குடியினரில் பலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்றும், கத்தோலிக்கத் துறவிகளின் உதவியால் இவர்களில் பலர் கல்வி பெற்றுள்ளனர் என்றும் Kharia இனத்தைச் சேர்ந்த அருள்தந்தை Gabriel Toppo கூறினார்.








All the contents on this site are copyrighted ©.